தனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் குறித்த ஒரு ஆச்சரிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 30 2020]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என்றும், ஓடிடியில் ரிலீஸாகவும் வாய்ப்பு இருப்பதாகவும் இருவேறு தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரைவில் ‘ஜகமே தந்திரம்’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் ’ஜகம்’ குணமானதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் ஆச்சரிய அறிவிப்பு ஒன்று நாளை காலை 9 மணிக்கு வெளியாகவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை பிறக்கவிருக்கும் ஜூலை மாதம் தனுஷின் பிறந்த நாள் மாதம் என்பதால் தனுஷின் பிறந்த நாளாக ஜூலை 28ல் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாளை காலை 9 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.
 

More News

ஊரடங்கு சமயத்தில் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை: பிரதமர் மோடி 

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பேசியதன் சாரம்சம்

என் கணவர் இருக்கும்போது கொரோனா என்னை என்ன செய்துவிடும்? கொரோனாவுக்கு பலியான சென்னை பெண்

சென்னையைச் சேர்ந்த அரியநாயகி என்ற பெண் கடந்த 1991ம் ஆண்டு அலெக்ஸ் என்பவரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டதால் அதன்பின் மூன்று வருட காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தினர்களின் சம்மதத்துடன் திருமணம்

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசி தந்தை கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

பள்ளி மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி, சென்னையில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின்

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி: கொரோனா சிகிச்சைக்கு கைக் கொடுக்குமா???

தட்டம்மை மற்றும் ரூபெல்லா போன்ற தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி தற்போது கொரோனா நோய்

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது