தப்புல சின்னத்தப்பு, பெரிய தப்பெல்லாம் கிடையாது: ஜகமே தந்திரம் டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

2.23 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் அதிரடி அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் பல நிரம்பியுள்ளன. இந்த டிரைலரில் தனுஷ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மா ஆகியோரின் காட்சிகளே அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வரியா லட்சுமி, கலையரசன் உள்பட ஒரு சிலரின் காட்சிகளும் ட்ரெய்லரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’அவங்கள நம்ம ஓடவுடணும், என்னை போய் ஓடி உடைய சொல்ற’ என்ற தனுஷின் வசனமும் ’தப்பு பண்றேன், அவ்வளவுதான் தப்புல சின்ன தப்பு, பெரிய தப்பு எல்லாம் கிடையாது’ என்ற வசனமும் ’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்று தனுஷ் கெத்தாக பேசும் வசனமும் டிரைலரின் ஹைலைட் ஆகும்

தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜேம்ஸ் காஸ்மோ கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையி,ல் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது