தனுஷின் 'ஜகமே தந்திரம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று தனுஷ் மற்றும் ரசிகர்கள் விரும்பினாலும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இதனை அடுத்து ஜூன் 1-ஆம் தேதி ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.