'கர்ணன்' படத்தின் 'பண்டாரத்தி புராணம்' பாடல்: பாடிய பிரபல இசையமைப்பாளர்

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கர்ணன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற மாரியம்மாள் பாடிய பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் சற்றுமுன் இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகி உள்ளது.

சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் ரீத்தா இணைந்து பாடியுள்ளனர்.

என் ஆளு பண்டாரத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடித்த சக்களத்தி

என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும், இந்த பாடலும் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் போலவே சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

அதிமுக சார்பில் பெறப்பட்ட விருப்பமனு… நேர்காணலுக்கு தயாராகிவரும் கட்சித் தலைமை!

தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 4 ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளதாக

உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் படமாகும் 'கோப்ரா'

உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் 'கோப்ரா'படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின்… ஓபிஎஸ் கருத்து!

தமிழக சட்டச்சபைத் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் இணையும் 'எல்.கே.ஜி' நடிகை!

நடிகர் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் அடுத்த திரைப்படம் 'பாதாய் ஹோ' என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் இந்த படத்திற்கு அவர் 'வீட்ல விசேஷங்க' என்ற டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

திமுக சார்பில் போட்டியிட தமிழ் திரைப்பட ஹீரோவின் மனைவி விருப்பமனு!

தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.