'கர்ணன்' திரைப்படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்டை தந்த கலைப்புலி எஸ்.தாணு!

  • IndiaGlitz, [Sunday,February 28 2021]

தனுஷ் நடிப்பில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே

மேலும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

‘கர்ணன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் சில ஆச்சரியத்தக்க தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது