close
Choose your channels

'தனுஷின் 'கர்ணன்' படத்தின் சூப்பர் அப்டேட்; கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் நாளை இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என்று ஒரு சூப்பர் அப்டேட்டை அறிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் நாளை வெளியாகும் என்ற தாணுவின் அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த பாடலை வரவேற்க இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடித்த மற்றொரு படமான ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.