தனுஷின் 'குபேரா' படத்தின் முக்கிய அப்டேட்.. படம் சூப்பர் வெற்றி தான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷ் நடித்த 'குபேரா' என்ற திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் வியாபார பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் பெற்றிருப்பதாக, தனது சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, இந்த படம் பிரமாண்டமாக விளம்பரம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை இவர்தான் பெற்றிருந்தார் என்பதும், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்தது.
அதுமட்டுமின்றி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’ என்ற படத்தின் தமிழக மற்றும் கர்நாடக ரிலீஸ் உரிமையையும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Excited to announce that the Tamil Nadu Theatrical Rights of #Kuberaa is bagged by #RomeoPictures ❤️
— raahul (@mynameisraahul) May 16, 2025
Happy to associate with the prestigious @SVCLLP @AsianSuniel & the most versatile @dhanushkraja sir 🤗
Get ready for a GRAND RELEASE on June 20, 2025 🔥#SekharKammulasKuberaa… pic.twitter.com/aM17rl0XLM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com