அமெரிக்காவில் கோலி சோடா குடிக்கும் தனுஷ்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

நடிகர் தனுஷ் தற்போது ’தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பதும் கடந்த சில வாரங்களாகவே அவர் அமெரிக்காவில் தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் சென்னை திரும்ப உள்ளதாகவும் சமீபத்தில் டுவிட்டர் ஸ்பேஸ் இணையதளத்தில் உரையாடியபோது தனுஷ் அறிவித்திருந்தார்

ஜூன் 18-ஆம் தேதி தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் வெளியாகும் போது தனுஷ் சென்னையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் கோலி சோடா குடிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ஹே கோலி சோடாவே’ என்ற பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு ஒருசில மணி நேரங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கணவர், குழந்தைகளுடன் 45வது பிறந்த நாளை கொண்டாடிய அஜித்-விஜய் பட நாயகி!

அஜித் நடித்த 'ராசி' விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய்' 'மின்சார கண்ணா' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா சமீபத்தில் தனது 45வது பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளியான பரபரப்பு தகவல்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார்.

பிரசன்னா மனைவி உயிரிழப்பு...! சீமான் ஆழ்ந்த இரங்கல்...!

திமுக-வின் மாநில செய்தித்தொடர்பு இணைசெயலாளர்  பிரசன்னா அவர்களின் மனைவி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதல்முறை கேட்கும்போதே சூப்பர்: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' சிங்கிள் பாடல் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'நெற்றிக்கண்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இதுவும் கடந்து போகும்' என்ற பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சீதா வேடத்திற்கு ரூ.12 கோடி கேட்ட பிரபல நடிகை… அதிர்ச்சியில் படக்குழு!

பாகுபலி போன்ற பிரம்மாண்ட சினிமாக்கள் தொடர்ந்து வெற்றிப்பெறுவதை அடுத்து தற்போது இதிகாசக் கதைகளின் மீது பல இயக்குநர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.