close
Choose your channels

'மாறன்' படத்தின் 'பொல்லாத உலகம்: செம ஆட்டம் போடும் தனுஷின் வீடியோ வைரல்!

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் சமீபத்தில் இந்த படம் ஹாட்ஸ்டார் டிஸ்னி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘மாறன்’ படத்தின் 'பொல்லாத உலகம்’ என்ற முழு வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. நான்கு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோ பாடலில் தனுஷின் செம ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளன என்பதும் தனுஷ் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.