'நானே வருவேன்' படம் குறித்த சூப்பர் அப்டேட் தந்த செல்வராகவன்!

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

'நானே வருவேன்’ படத்தின் பாடல்கள் கம்போசிங் செய்யும் பணி முடிவடைந்து விட்டதாகவும் இந்த பாடல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான நாள் நெருங்கி விட்டதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இயக்குனர் செல்வராகவன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் இந்துஜா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே தளபதி விஜய்யின் ’பிகில்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நான் சோம்பேறி உங்களை பழிவாங்க விரும்பவில்லை: யாரை சொல்கிறார் அஸ்வின்?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி'  என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி திரையுலகில் ஹீரோ வாய்ப்பை பெற்றவர் அஸ்வின். இவர் நடித்த 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படம்

இது உங்க சொந்த வீடு இல்ல, நீங்க ஒரு ஹவுஸ்மேட்: வனிதாவை போட்டு தாக்கும் பாலாஜி!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று அறிமுக எபிசோட் உடன் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி,  அனிதா

அவர் மாயாஜாலம் செய்கிறார்… பாடகரைப் பார்த்து சிலிர்த்துப்போன நடிகர் அல்லு அர்ஜுன்!

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா“

சுந்தர் சியின் அடுத்த படத்தில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள் மற்றும் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளன.