இன்று வெளியாகும் 'நானே வருவேன்' பாடலை பாடியது இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று வெளியாகும் பாடலின் டைட்டில் ‘வீரா சூரா’ என்றும் இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே பாடி உள்ளார் என்று சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’நானே வருவேன்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ’திருச்சிற்றம்பலம்’ படத்தை அடுத்து தனுஷூக்கு அடுத்த வெற்றிப் படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

'பொன்னியின் செல்வன்' விழாவில் 'இந்தியன் 2' அப்டேட் கொடுத்த ஷங்கர்!

நேற்று நடைபெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2' பட ம் குறித்த மாஸ் அப்டேட்டை தெரிவித்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஒரே நாளில் வெளியாகும் கணவன் - மனைவி நட்சத்திரங்களின் படங்கள்: ரசிகர்கள் வாழ்த்து!

திரையுலகில் நட்சத்திரமாக இருக்கும் கணவன்-மனைவியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

டுவிட்டரில் இருந்து திடீரென வெளியேறிய 'திருச்சிற்றம்பலம்' நடிகை: காரணம் என்ன?

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்த நடிகை திடீர் என டுவிட்டரில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அப்பவே மணிரத்னம் பான் - இந்தியா இயக்குனர்: ஷங்கர் புகழாரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ஷங்கர், 'மணிரத்னம் அவர்கள்

நான் முயற்சி செய்தேன், மணிரத்னம் வெற்றி பெற்றுவிட்டார்; 'பொன்னியின் செல்வன்' குறித்து கமல்ஹாசன்!

 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை எடுக்க நான் முயற்சி செய்தேன் என்றும் ஆனால் மணிரத்னம் செய்து காட்டிவிட்டார் என்றும் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில்