close
Choose your channels

தனுஷின் 'நானே வருவேன்' டைட்டில் மாற்றப்படுகிறதா?

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தின் டைட்டில் திடீரென மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அவரது சகோதரர் செல்வராகவன் இயக்க உள்ளார் என்பதும், இந்த படத்திற்கு ’நானே வருவேன்’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது என்பதும், இந்த போஸ்டர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதை அடுத்து தனுஷ், யுவன்சங்கர்ராஜா, செல்வராகவன் ஆகியோர்களின் கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’நானே வருவேன்’ என்ற டைட்டில் மாற்றப்பட இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ’நானே வருவேன்’ என்ற டைட்டில் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்ட நிலையில் இந்த டைட்டிலை படக்குழுவினர் ஏன் மாற்றுகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மேலும் டைட்டில் மாற்றத்தின் போது டைட்டில் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த விளக்கமும் படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.