முடிந்தது தனுஷின் அடுத்த பட படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போது?


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் ’கேப்டன் மில்லர்’ ‘ராயன்’ என இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டு அவர் நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனுஷ் நடித்த ’இட்லி கடை’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனை அடுத்து, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், அதன் பின்னர் ப்ரமோஷன் பணிகளும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பின் தனுஷ் ஜோடியாக இந்த படத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசையில், கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவில், பிரசன்னாவின் படத்தொகுப்பில் உருவாக்கிய இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com