அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தால் தள்ளி போன தனுஷ் படம்.. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த 'விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று வெளியான டிரைலரில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தனுஷின் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
தனுஷ் இயக்கத்தில் உருவான ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது. இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் 'விடாமுயற்சி’ பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் உறவினர் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் நாயகிகளாக அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளனர். தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
#NEEK in theatres from 21st Feb, 2025
— Wunderbar Films (@wunderbarfilms) January 17, 2025
- @theSreyas
Director @wunderbarfilms pic.twitter.com/YmakftcfCY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments