close
Choose your channels

தனுஷின் 'பக்கிரி' டிரைலர் விமர்சனம்

Tuesday, June 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பக்கிரி' திரைப்படம் ஏற்கனவே பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது வரும் 21ஆம் தேதி முதல் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

முதல் காட்சியில் நண்பரை காப்பாற்றும் மந்திரவாதியாக அறிமுகமாகிறார் தனுஷ். 'நாமெல்லாம் ஏழையாம்மா என அம்மாவிடம் அப்பாவியாக கேட்டு, ஏழையா இருக்க நான் விரும்பவில்லை என சிறுவயதிலேயே மேஜிக் கற்றுக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு இளைஞன் தான் தனுஷின் பக்கிரி கேரக்டர்

இந்த நிலையில் அப்பாவை தேடி கடல் தாண்டி பாரிஸ் செல்கிறார் தனுஷ். பாரீஸில் ஒரு வெள்ளைக்கார காதலி கிடைக்கின்றார். இந்த நிலையில் பாரிஸில் இருந்து தவறி லண்டனுக்கு செல்லும் தனுஷ், மீண்டும் பாரீஸ் வந்தாரா? அப்பாவை தேடும் அவரது நோக்கம் நிறைவேறியதா? என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

அதே சுறுசுறுப்பு, வெள்ளைக்கார காதலிக்கு லிப் கிஸ், லண்டன் போலீசிடம் அப்பாவியாக பேசுவது, என படம் முழுவதும் தனது வழக்கமான நடிப்பை தனுஷ் தந்துள்ளார். வித்தியாசமான டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.