close
Choose your channels

'அசுரனை' அடுத்து அடுத்த ஹிட்டுகளுக்கு தயாராகும் தனுஷ்!

Wednesday, October 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் தீபாவளி திரைப்படங்களையும் தாண்டி வசூல் மழை பொழிந்து வரும் நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தனுஷ் 40' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வரும் நிலையில் வரும் நவம்பர் 5ம் தேதியுடன் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து தனுஷ் நடித்து வரும் 'பட்டாஸ்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதனை முடித்து விட்டால் போஸ்ட் புரடொக்சனுக்கு இந்த படம் தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் சோழர்களின் வீர விளையாட்டான களரி என்ற கலையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. சினேகா மட்டும் மெஹரின் நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்து வருகின்றனர். துரை செந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்

பட்டாஸ் மற்றும் 'தனுஷ் 40' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி 'அசுரனுக்கு அடுத்த ஹிட் படங்களாக தனுஷூக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.