close
Choose your channels

'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மகன்கள்.. வைரல் புகைப்படம்..!

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் வெங்கி அட்லூரி உள்பட குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் தனுஷின் அம்மா மற்றும் தனுஷின் மகன்கள் லிங்கா, யாத்ரா உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

‘வாத்தி’ திரைப்படத்தில் 5 பாடல்கள் இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஐந்து பாடல்கள் மற்றும் பாடியவர்கள், பாடலை எழுதியவர்களின் விவரங்கள் இதோ:

1. வா வாத்தி: பாடலாசிரியர் - தனுஷ் பாடியவர்; ஸ்வேதா மேனன்

2. நாடோடி மன்னன்: பாடலாசிரியர் - யுகபாரதி, பாடியவர்; அந்தோணி தாசன்

3. கலங்குதே: பாடலாசிரியர் - யுகபாரதி பாடியவர்; விஜய் ஜேசுதாஸ்

4. ஒன் லைஃப்: பாடலாசிரியர் - தனுஷ் மற்றும் அறிவு, பாடியவர்; ஸ்டீபன் மற்றும் அறிவு

5. சூரிய பறவைகள்: பாடலாசிரியர் - யுகபாரதி பாடியவர்; திப்பு மற்றும் ரவி

தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் தனுஷூக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.