தனுஷின் 'வாத்தி' படத்தின் நாயகி இவர்தான்: அவரே பதிவு செய்த டுவிட் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,December 23 2021]

தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கு பதிப்பின் டைட்டில் ’சார்’ என்றும் வெளியான தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி மிகப்பெரிய அளவில் தனுஷ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சம்யுக்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘தமிழ் தெலுங்கில் உருவாகும் மிக திறமையான நடிகர் தனுஷின் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். ’வாத்தி’ படத்தை தயாரிக்கும் சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முந்தைய படத்திலும் சம்யுக்தா மேனன் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரியங்கா சகோதரர் நடத்திய பேச்சுவார்த்தை: உடனடியாக நிரூப் செய்தது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று பிரியங்காவின் தாயார் மற்றும் சகோதரர்

பசியால் உயிரிழந்த சிறுவனின் மரணத்தில் திடீர் திருப்பம்… சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி!

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மேலத்தெரு எனும் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி 5 வயது மதிக்கத்தக்க சிறுவன்

சுற்றுச்சசூழல் பாதுகாப்பு… சைக்கிளில் அலுவலகம் வந்த பெண் கலெக்டர்!

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவரும் காயத்ரி கிருஷ்ணன் தனது வீட்டிலிருந்து மிதிவண்டியை

பேஷன் உலகில் இதுசெம டிரெண்ட்… 60 வயதில் பேஷன் மாடலான தாய்!

டிராவிஸ் டிமீர் எனும் பேஷன் டிசைனர் தனது பேஷன் பொருட்களுக்கு எந்த இளம் மாடலையும் விளம்பர

சிறுமிகளிடம் சில்மிஷம்… பிரபல கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டு சிறை!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும்