தனுஷின் 'வாத்தி'  ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,February 15 2023]

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளிருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான ட்ரெய்லருக்கு பின் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘வாத்தி’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘வாத்தி’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 139 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 19 நிமிடங்கள் மட்டுமே ரன்னிங் டைம் கொண்ட படமாக உள்ளது. சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது தெரிந்ததே.

More News

ஆரம்பமாகிறது 'மாவீரன்' புரமோஷன்.. முதல் அப்டேட் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மண்டேலா' இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் பட குழுவினர் அடுத்த கட்டமாக

கையிலும் ரோஸ், உடையிலும் ரோஸ்.. 'பாரதி கண்ணம்ம்மா' நடிகையின் செம புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்த ஃபரீனா ஆசாத்தின் காதலர் தின புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

அச்சு அசலாக கோஹ்லியை போலவே அடித்து நொறுக்கிய ஜெமீமா.. வைரல் வீடியோ..!

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை ஜெமிமா, விராத் கோஹ்லி போலவே ஷாட் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்த

பாய் ப்ரண்டை விட பிரியாணி தான் முக்கியம்.. ஐஸ்வர்யா ராஜேஷின் க்யூட் வீடியோ..!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு பாய்பிரண்டை விட பிரியாணி தான் பிடித்தது என தெரிவித்துள்ளார்

விஜய் அம்மா-அப்பாவின் காதலர் தின க்யூட் ஸ்டில்: இணையத்தில் வைரல்..!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காதலித்து திருமணம் செய்த பல தம்பதிகள் இன்றைய காதலர் தினத்தை தங்கள் மலரும் நினைவுகளாக பதிவு செய்து வருகின்றனர்.