தனுஷின் 'வாத்தி' படத்தின் செம அப்டேட்.. பிப்ரவரிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,January 04 2023]

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வந்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனுஷ் நடித்த ’மாறன்’, ‘தி க்ரேமேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய 4 திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இதில் ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 17 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். யுவராஜ் ஒளிப்பதிவில் நவீன்நூலி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை எழும்பூரில் திடீரென சாலையோர மக்களை சந்தித்த நயன்தாரா: என்ன காரணம்?

சென்னை எழும்பூரில் உள்ள சாலையோர மக்களை திடீரென நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சந்தித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

மகளின் பிறந்த நாளில் ஷாலினி அஜித்தின் செம செல்பி புகைப்படம்: இணையத்தில் வைரல்

 அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் தனது மகளுடன் எடுத்த செல்பி புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'உத்தம வில்லன்' தோல்வி.. 8 ஆண்டுகளுக்கு பின் கமல் எடுத்த அதிரடி முடிவு!

கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் உருவான 'உத்தமவில்லன்' என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

எவிக்சனுக்கு பின் மணிகண்டன் வெளியிட்ட உருக்கமான பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 85 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியிலிருந்து மணிகண்டன் எவிக்சன் செய்யப்பட்டார்

'துணிவு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றமா? 'வாரிசு' படக்குழுவினர்களின் ரியாக்சன் என்ன?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளான ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்று செய்திகள் வெளியானது.