'வடசென்னை' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்! ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. தனுஷின் கனவுப்படங்களில் ஒன்றான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தில் எந்த காட்சிகளையும் நீக்க சம்மதிக்காததாலும், ஒருசில வன்முறை காட்சிகள் இயல்பாக இருப்பதாலும் இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'சர்கார்' படத்தால் நனவாகிய நான்கு கனவுகள்: வரலட்சுமி

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது

யுவன்ஷங்கருடன் மீண்டும் இணையும் வெற்றி பட இயக்குனர்

பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் உருவான 'பியார் பிரேமா காதல்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கருணாஸ் முன்ஜாமீன் மனு: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயரதிகாரி ஆகியோர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில்

நக்கீரன் கோபால் கைது: கமல்ஹாசன் கண்டனம்

நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் தமிழக கவர்னர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்ததால்,