'மாரி 2' படப்பிடிப்பில் தனுஷ் காயம்: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,June 23 2018]

தனுஷ் நடித்து வரும் 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'மாரி 2' படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் நடிக்கும்போது தனுஷூக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனுஷ் விரைவில் குணமாகிவிடுவார் என்றும் அதன் பின்னர் படப்பிடிப்பு தொடரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தனுஷ் காயம் ஏற்பட்ட தகவல் தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விரைவில் அவர் குணமாக வேண்டும் என்று பிரார்த்திப்பாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தாம்ஸ், ரோபோசங்கர், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.