விஐபி 2' படத்தின் 3 நாள் தமிழக வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,August 14 2017]

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்று வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்று நாள் தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் 'விஐபி 2' திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.1.53 கோடி, செங்கல்பட்டு பகுதியில் ரூ.3.5 கோடி, கோவையில் ரூ.1.8 கோடி மற்றும் நெல்லை-குமரி பகுதியில் 53 லட்சம் என வசூல் செய்துள்ளது.

இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படத்தின் ஐந்து நாள் தமிழக வசூல் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக விநியோகிஸ்தர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன. 'சிங்கம் 2, 'காஞ்சனா வரிசையில் இரண்டாவது பாக வெற்றி படங்களின் பட்டியலில் 'விஐபி 2' படமும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காயத்ரிக்கு எதிராக திரும்பும் ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பம்: அதிரடி திருப்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று காயத்ரிக்கு ஆதரவாக இருந்த ஒரே நபரான சக்தி வெளியேற்றப்பட்டார்...

சிவாஜிகணேசன் சிலை மற்றம்; நடிகர் சங்கம் செயற்குழு புதிய தீர்மானம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிலையாக அல்ல, ஒவ்வொரு நடிகனின் அசைவிலும் குரலிலும் இன்னமும் தன் தாக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையுலகத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் சொந்தமானவர் கலாச்சார குறியீடாக விளங்குகின்றவர்...

குதிரை பேரம், நீட் தேர்வு குறித்து கமல்ஹாசன் டுவீட்

தமிழகத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்று நீட் தேர்வு. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும் மற்ற எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன...

'விஐபி 2' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளியன்று 'விஐபி 2' திரைப்படம் பெருவாரியான திரையரங்குகளில் வெளியானது...

'தரமணி' படத்தின் தரமான வசூல் நிலவரம்

தரமான, வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளியன்று வெளியான மற்றொரு தரமான திரைப்படமான ராம் அவர்களின் 'தரமணி' படத்திற்கும் எதிர்பார்த்ததைவிட நல்ல வசூல் கிடைத்துள்ளது...