close
Choose your channels

நிஜமான டூயட்… காதல் மனைவியை வெட்கப்பட வைத்த நடிகர் தனுஷ்… வைரல் வீடியோ!

Tuesday, May 4, 2021 • தமிழ் Comments

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். “தி கிரே மேன்“ எனும் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருந்து வரும் அவர் தன்னுடைய டிவிட்டரில் காதல் மனைவி ஐஸ்வர்யாவுக்காக ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளை காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா எனும் இரு மகன்கள் உள்ளனர். டீஏன் வயதில் இரு மகன்கள் இருப்பினும் நடிகர் தனுஷ் இப்போது வரைக்கும் இளமையான தோற்றத்துடனே இருந்து வருகிறார். அவர் தனது மாமனார் ரஜினிகாந்த் நடித்து ஹிட் அடித்த “பேட்ட” திரைப்படத்தில் இடம்பெற்ற “இளமை திரும்புதே“ எனும் பாடலை தனது மனைவிக்காக பாடி அசத்தியுள்ளார்.

நடிப்பு மட்டுமல்ல, தனஷ் பல சினிமாக்களில் பின்னணி பாடியிருக்கிறார். அந்த வகையில் தனது மனைவிக்காக இவர் பாடி அசத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனுஷின் இரு மகன்களும் உள்ளனர். மேலும் தனுஷ் பாடியதை அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் வெட்கப்படுவதும் இதில் பதிவாகி உள்ளது. இந்தக் காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் மகன்களை வைத்துக் கொண்டு அதுவும் மாமனார் நடித்த படத்தின் பாடலா? எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz