close
Choose your channels

பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்கிய தனுஷ் பட நடிகை: நெட்டிசன்கள் பாராட்டு..!

Monday, February 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்கியதாக ’வாத்தி’ பட நடிகை தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’வாத்தி’ படத்தின் நாயகி சம்யுக்தா மேனன், செய்தியாளர்களுக்கு பேசிய போது, ‘எனது பெயர் சம்யுக்தா தான், ஆனால் மேனன் என்ற ஜாதி அடையாள பெயர் போட்டுக் கொள்வதை நான் விரும்புவதில்லை.

மலையாள சினிமாவில் பல சம்யுக்தாக்கள் இருப்பதால் மீடியாக்கள் என்னை தனியாக காட்ட மேனன் என்று இணைத்துக் கொண்டனர். இனிமேல் என்னை தயவுசெய்து மேனன் என்று ஜாதியை அடையாளப்படுத்தாமல் சம்யுக்தா என்று கூறினால் போதும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ’வாத்தி’ படம் குறித்து அவர் பேசிய போது ’இந்த படம் கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டுக்காட்டும் என்றும் எல்லோரும் படிக்க வேண்டும் ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்றும் அவர் கூறினார். நான் பாலக்காட்டு பெண்ணாக இருந்தாலும் எனக்கு தமிழ் சரளமாக வரும் என்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க எனக்கு இதுவரை சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் தனுஷூடன் நடித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.