மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் தனுஷ்? தயாரிப்பாளரும் தெலுங்கு திரையுலக பிரபலம் தான்..!

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் இன்னொரு பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிப்பதும் ஒரு தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் தான் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், ’ராயன்’ என்ற படத்தில் நடித்து இயக்கி முடித்து உள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வெளியாக உள்ளது. இதை எடுத்து தற்போது அவர் சேகர் கம்முள்ள இயக்கத்தில் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக இருந்த ஒருவர், டான் ஆக மாறுவது எப்படி என்ற கேரக்டரில் நடித்து வந்துள்ளார் என்றும் தெரிய வருகிறது. இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தையும் ஒரு தெலுங்கு இயக்குனர் தான் இயக்குகிறார் என்றும் அவர் ஸ்ரீகாரம் என்ற படத்தை இயக்கிய கிஷோர் என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளார் என்பதும் இவர் ஏராளமான சூப்பர் ஹிட் தெலுங்கு படங்களை தயாரித்து உள்ள நிலையில் தமிழில் விஜய் நடித்த ’வாரிசு’ என்ற படத்தையும் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ், சேகர் கம்முலா படத்தை முடித்தவுடன் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’இளையராஜா’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் கிஷோர் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

More News

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படம் மட்டுமல்ல, இன்னொரு படத்திலும் இணையும் துல்கர் சல்மான்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் இன்னொரு படத்திலும் அவர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க

ரஜினியின் 'கூலி' படத்தில் நடிக்க நிபந்தனை விதித்தாரா சத்யராஜ்?  பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில்

'கூலி' பட விவகாரம்.. இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து ரஜினிகாந்த் கருத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தனது இசை இடம் பெற்றிருப்பதாகவும் அந்த இசையை நீக்க வேண்டும்

நேற்று தந்தை.. இன்று மகன்.. பாசத்தை பரிமாறும் இளையராஜா - யுவன் புகைப்படங்கள்..!

இசைஞானி இளையராஜா குடும்பத்தினர் தற்போது மொரீஷியஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பதையும் பார்த்தோம்

புர்ஜ் கலிஃபா எதிரே மொட்டை மாடி நீச்சல் குளத்தில் டிடி.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டல் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது