தனுஷின் 2 படங்களை தயாரிப்பதாக சொன்னாரே ஐசரி கணேஷ்.. அதில் ஒரு படத்தின் டைட்டில் இதுதான்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சில நாட்களுக்கு முன்னால் நடந்த 'சுமோ’ திரைப்பட விழாவின் போது, தனுஷ் நடிக்க இருக்கும் இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார்.
அதில் ஒரு படம், தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் படம் என்றும், ஆனால் அந்த படத்திற்கு முன்னரே இன்னொரு தனுஷ் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது, அந்த படத்தின் டைட்டில், இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஐசரி கணேஷ் கூறியது போல், அந்த படத்தை இயக்குபவர் விக்னேஷ் ராஜா என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சரத்குமார் நடித்த ’போர் தொழில்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, இந்த படத்திற்கு ’அறுவடை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.
மேலும், இந்த படத்திற்கான பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி தற்போது 15 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த செட்டில் தான் படத்தின் பாதிக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகி உட்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments