தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம்: அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,July 01 2022]

நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அதிரடி அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ‘தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் ஜூலை 22ஆம் தேதியும், ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ மற்றும் ‘வாத்தி’ திரைப்படங்களின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பு நாளை மாலை 05.30 மணிக்கு வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது எனக்கு தெரியாது: நடிகையின் சகோதரர் அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகையின் சகோதரர் தனது மனைவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தனக்கு தெரியாது என்றும் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுகிறாரா விஷால்?

நடிகர் விஷால் விரைவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எதிர்த்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'யானை' வெற்றியால் பான் - இந்தியா திரைப்படத்திற்கு தயாராகிறாரா ஹரி?

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியான 'யானை' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஊடகங்களில் இந்த படத்திற்கு

அஜித் படத்திற்கு முன்பே விக்னேஷ் சிவன் இயக்கும் படம்: பரபரப்பு தகவல்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும்

தளபதி 67' படத்தில் இணையும் 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' பிரபலம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த படமான 'தளபதி 67'