லீக் ஆனது தனுஷின் அடுத்த படத்தின் கெட்டப்.. வைரல் வீடியோ..


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்த படத்தில் அவருடைய கெட்டப் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவான "குபேரா" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடித்து இயக்கிய "இட்லி கடை" என்ற படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, அவரது இயக்கத்தில் உருவான "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படமும் இம்மாதம் வெளியாக உள்ளது.
மேலும், அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக கைரா அத்வானி நடிக்கவிருப்பதாக செய்தி வெளியானது.
இந்த படம் முழுக்க முழுக்க விமான படையை மையமாகக் கொண்ட காதல் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் கசிந்து வருகிறது.
அந்த வீடியோவில் தனுஷின் புதிய கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
#TereIshkMein shooting started at Delhi yesterday 🎬✅#Dhanush look for the film👌❤️
— AmuthaBharathi (@CinemaWithAB) February 16, 2025
The man in non-stop work back to back... without taking a break🫡pic.twitter.com/228LH0GnMH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com