தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் தொடங்குவது எப்போது? புதிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 26 2017]

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

என்னுடைய படங்கள் எப்போதும் தரமாகவும் அதே நேரத்தில் மாஸ் ஆகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவேன். கார்த்திக் சுப்புராஜின் இந்த படம் எனது விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

இரண்டு இளம் திறமையான கலைஞர்கள் இணையும் இந்த படம் நிச்சயம் வித்தியாசமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜனாதிபதி பதவிக்கு இவர் ஒருவர்தான் தகுதியானவர். சுப்பிரமணியன் சுவாமி

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் கிட்டத்தட்ட பாஜக தேர்வு செய்யும் வேட்பாளர்தான் அடுத்த ஜனாதிபதி என்பது உறுதியாகியுள்ளது...

ரஜினி பட லொகேஷனில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

'ரெமோ' படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் நடித்த 'வேலைக்காரன்' பட டைட்டிலில் உருவாகி வரும் படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மோகன் ராஜா இயக்கி வரும் இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கின்றார்...

தினகரன் கைது! அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெற கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் சுமத்தப்பட்டு அதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தினகரன் கைதான சில மணி நேரத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக, சசிகலா குடும்பத்தினர்களின் முழு கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அதனை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு பெருமளவு இருந்தது...

தாதா சாகேப் பால்கே விருது வென்ற இயக்குனருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை அறிவித்தது...