அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாகும் தனுஷின் இரண்டு திரைப்படங்கள் 

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்த இரண்டு படங்களும் ஓடிடியில் தான் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான ’ தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் வரும் ஜூலை மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’மாறன்’ என்ற திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே தனுஷின் அடுத்த இரண்டு படங்களும் ஓடிடியில் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடித்துவரும் ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த படங்களின் குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் சித்தார்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்: பிக்பாஸ் தமிழ் நடிகை

நடிகர் சித்தார்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன் என பிக்பாஸ் தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்டா+ ஒமைக்ரான்- அச்சுறுத்தும் புதிய உருமாறிய வைரஸ்!

சைப்ரஸ் நாட்டில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் பண்புகளைக்

ஊரடங்கின்போது சைக்கிளில் ரெய்டு நடத்திய பெண் கலெக்டர்!

கொரோனா அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நேற்று தமிழகம் முழுவதும்

வாட்டர் டேங்கில் மலைபோல் கொட்டிக்கிடந்த பணம்… ஐ.டி ரெய்டில் சுவாரசியம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவரது நிலத்தடி

மேலும் ஒரு நடிகைக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்!

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.