தனுஷின் அடுத்த படத்தை இயக்குபவர் குறித்த ஒரு ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Sunday,April 24 2016]
பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தனுஷின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷின் அடுத்த படத்தை இயக்குபவர் இளம் இயக்குனராகவும் வெற்றி இயக்குனராகவும் திகழ்ந்து வரும் கார்த்திக் சுப்புராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரின் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' படத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார் நமீதா

பிரபல நடிகை நமீதா, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்...

விக்ரமின் 'இருமுகன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

'அரிமாநம்பி' ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை, மலேசியா படப்பிடிப்புகள் வெற்றிகரமாக...

சூர்யாவின் '24' சென்சார் தேதி குறித்த தகவல்

முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது...

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்

தனுஷ் நடித்த 'கொடி' மற்றும் 'தொடரி' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

தனுஷ்-யுவன்சங்கர் ராஜா இணைந்த 'சொல்லித் தொலையேன்மா'

தனுஷ் நடிக்கும் ஒருசில படங்களுக்கு யுவன்ஷங்கர் இசையமைத்திருந்தாலும் தற்போது மீண்டும் ஒருமுறை தனுஷ் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலால் இணைந்துள்ளனர்...