close
Choose your channels

எம்.ராஜேஷ் அடுத்த படத்தில் தனுஷ்: ஆச்சரிய அறிவிப்பு!

Monday, February 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றின் தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்க ’பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் ஆனந்தராஜ், பிக்பாஸ் டேனியல், பிக்பாஸ் ரேஷ்மா உள்பட பலர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை அமைத்து நடிக்கும் இந்த படத்தின் ஒரு பாடலை எழுதி தனுஷ் பாட இருப்பதாகவும் இந்த பாடலின் டைட்டில் ’டாட்டா பை பை பை’ என்றும் இந்த பாடல் குறித்த பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம் ராஜேஷ் இயக்கும் படத்தில் முதன்முதலாக தனுஷ் ஒரு பாடலை எழுதி பாடவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.