close
Choose your channels

மகன்களுடன் தனுஷ் ஜாலியாக என்ன செய்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் உருவான ’தி க்ரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ‘வாத்தி’ , ‘நானே வருவேன்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பதும் அடுத்தடுத்து இந்த படங்கள் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஜூலை 22 ஆம் தேதி ’தி க்ரே மேன்’ திரைப்படமும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் மகன்களுடன் அவர் இன்னும் நெருக்கமாக தான் உள்ளார் என்பதும் அவ்வப்போது மகன்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனது மகன்களுடன் தனுஷ் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தனது மகன்களுடன் கிரிக்கெட் டீமுடன் விளையாடிய பின் எடுத்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது

ஒரு மகனை தனுஷ் தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதும் இன்னொரு மகனின் அருகில் இருப்பது போன்றும் இருக்கும் இந்த புகைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.