close
Choose your channels

தாணு கொடுத்த பட்டத்தை மறுத்த தனுஷ்

Tuesday, July 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த முதல் படமான 'பைரவி' படத்தை விநியோகம் செய்த கலைப்புலி எஸ்.தாணு, அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தாணு, 'தனுஷூக்கு 'இளைய சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை அளித்தார்.

மேலும், 'தனுஷை வைத்து படம் இயக்க இந்தியாவின் அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விரும்புவதாகவும், அந்த அளவுக்கு தனுஷ் தனது திறமையை வளர்த்துக் கொண்டிருப்பதாகவும், எந்த கேரக்டர் கொடுத்தாலும் தனுஷால் நடிக்க முடியும் என்றும் பேசினார்.

இதே நிகழ்ச்சியில் பின்னர் பேசிய தனுஷ், 'தாணு அவர்கள் என் மீது உள்ள அன்புமிகுதியால் தனக்கு 'இளைய சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை அளித்ததாகவும், ஆனால் தான் எந்த பட்டத்தையும் விரும்புவதில்லை என்றும், தனக்கு தனுஷ் என்ற பெயரே போதுமானது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக தனுஷ் நடித்த 'பட்டாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 'இளைய சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த போஸ்டரில் எந்த பட்டமும் தனுஷ் பெயருக்கு முன்னால் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் தற்போது தனுஷ் 'அசுரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.