இதற்கு முன் எங்கே பார்த்தேன்? மகனுடன் தனுஷ் இருக்கும் மாஸ் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

நடிகர் தனுஷ் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இதற்குமுன் நான் எங்கே பார்த்தேன் இதை’ என்ற கேள்வி குறியுடன் மகனுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தபின் அவரது திரையுலக கிராப் உச்சத்திற்கு சென்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும், மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாகவும் தனுஷ் சமீபத்தில் அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தனுஷ் தனது இரண்டு மகன்களுக்காக மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ்வார் என்றும் இதற்காக இரு குடும்பத்தினர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தனுஷுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்ய புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் ’இதற்கு முன் இதை நான் எங்கே பார்த்தேன் என்ற கேள்விக்குறியுடன் மகனுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து 45 நிமிடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் மூன்று லட்சம் லைக்ஸகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கிங் பட்டியலில் இணைந்த எலான் மஸ்க்… ஏழைகளுக்காக எடுத்த அதிரடி முடிவு!

உலகின் முதல்தர வரிசை பணக்காரராக இருந்துவரும் எலான் மஸ்க் தன்னுடைய கால்வாசி பங்குகளை கடந்த ஆண்டு விற்பனை

சிங்கிளாக மாறிய 73 வயது பாட்டி… புது காதலரை கைப்பிடித்த ஆச்சர்யம்!

அமெரிக்காவைச் சேர்ந்து பெண் ஒருவர் தன்னுடைய 40 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு 3 வருடங்கள்

ராஜூவை குறைகூறிய தாமரை: ஜால்ரா அடித்த ஜூலி!

ராஜுவை குறைகூறி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை பேசியபோது ஜூலியும் ஜால்ரா அடித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

காதலர் தினத்தில் அசால்ட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளும் மேகா ஆகாஷ்: வைரல் புகைப்படம்!

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை மேகா ஆகாஷ். இவர் கையில் சிகரெட்டுடன் உள்ள புகைப்படத்தை

ஹிஜாப் போராட்ட மாணவி: வெகுமதியாக கிடைத்த ரூ.5 லட்சத்தை என்ன செய்தார் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றபோது அவரை சுற்றி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இட்ட மாணவர்கள் மத்தியில் அல்லாஹு அக்பர் என கோஷமிட்ட