இரண்டாவது வாரத்திலும் பவரான வசூல் செய்த 'பவர்பாண்டி'

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

தனுஷின் முதல் இயக்கத்தில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான 'பவர்பாண்டி' படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது வார வசூலும் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படம் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் சென்னையில் இந்த படம் 19 திரையரங்குகளில் 174 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.53,86,080 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் குடும்பத்துடன் கூடிய பார்வையாளர்கள் 85% நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் கடந்த 14ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை ரூ.1,44,25,810 சென்னையில் மட்டும் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு நமது வாழ்த்துக்கள்

More News

சிபிராஜின் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை', 'கட்டப்பாவ காணோம்' படங்களுக்கு அடுத்து சிபிராஜ் தற்போது 'நாளைய இயக்குனர்' புகழ் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

'பாகுபலி'யை அடுத்து மீண்டும் பிரமாண்டமான படத்தில் பிரபாஸ்

இந்தியாவின் பிரமாண்ட திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களுக்காக சுமார் ஐந்து வருடங்கள் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது மீண்டும் பிரமாண்டமாக தயாராகி வரும் ஒரு மும்மொழி படத்தில் நடித்து வருகிறார்...

சூர்யா மிஸ் செய்த காதல் மன்னன் கேரக்டரில் மணிரத்னம் நாயகன்

நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம் மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தளபதி 61: விஜய்யுடன் இணையும் வடிவேலு குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை விஜய்-நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் தற்போதைய இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் காஜல் அகர்வால் இ&#