தனுஷ் வெளியிட்ட 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில்!

  • IndiaGlitz, [Sunday,August 04 2019]

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 90ஆவது படைப்பாக தயாரிக்கும் திரைப்படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம் 

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட உள்ளதாக நேற்றே நாம் அறிவித்த நிலையில் சற்று முன் தனுஷ் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே நாம் கணித்தபடி இந்த படத்தின் டைட்டில் 'களத்தில் சந்திப்போம்' என்று வைக்கப்பட்டுள்ளது 

இந்த படத்தை என் ராஜசேகர் இயக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவும் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்ய உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பார்க்கும்போது இது ஒரு அரசியல் மற்றும் ஆக்சன் கதையம்சம் கொண்ட படம் என தெரிகிறது