close
Choose your channels

முக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்

Thursday, October 17, 2019 • தமிழ் Comments

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் மற்ற பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர் 

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசார பணிகளில் பிசியாக இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று இரவு ‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்தார். அசுரன் ஒரு படம் அல்ல பாடம் என்றும் அவர் கூறியது படக்குழுவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது

இந்த நிலையில் முக ஸ்டாலின் அவர்களின் பாராட்டுக்கு தனுஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

காலம் ஒதுக்கி
அசுரனைப் பார்த்ததற்கும்
பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

 

Get Breaking News Alerts From IndiaGlitz