மீண்டும் இணையும் முப்பெரும் வெற்றி கூட்டணியில் தனுஷ்!

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ‘மயக்கம் என்ன’’ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பதும் அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த செய்தியை தற்போது செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையவுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏற்பதாகவும் செல்வராகவன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து தனுஷ் செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய முப்பெரும் கூட்டணி வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியின் கொரோனா பரிசோதனை ரிசல்ட்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு 8 மாதங்களுக்கு முன்னர் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது

இன்னும் கொஞ்ச நாள்தான்.. வெளியான உலகம் அழியும் புதிய தேதி… ஆராய்ச்சி வீடியோ!!!

2020 ஆம் ஆண்டு பிறந்த உடனே இந்த உலகம் அழிந்துவிடுமா என்ற அச்சம் பலரின் மனதில் எழுந்தது

நடிகை நயன்தாராவுக்கு ராதிகா வாழ்த்து: ஏன் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'கூழாங்கல்' என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்போவதாக

'அண்ணாத்த' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: ரஜினிக்கு கொரோனா பரிசோதனை?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதை பார்த்தோம்

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா??? வெளியான புது அறிவிப்பு!!!

கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா பரவலைக் கட்டப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.