பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன.. 'நானே வருவேன்' படத்தின் மயக்கும் பாடல்!

  • IndiaGlitz, [Wednesday,September 28 2022]

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

அண்ணன் தம்பி என்ற இரண்டு வித்தியாசமான கேரக்டரில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தை செல்வராகவன் இயக்கியது மட்டுமின்றி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் உருவாகிய இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் செய்தியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் மாறுவதென்ன
முத்துமணிச்சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என்ன
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பால்முகம் பகல் இரவை மாற்றுவதென்ன
பசுந்தளிர் என ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே

More News

'பொன்னியின் செல்வன்' படத்தில் 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'அஞ்சலி' பட நடிகர்!

மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' திரைப்படம் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் பணிபுரிந்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த விஜய் டிவி பிரபலமா? கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள

மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்த பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் மனைவி!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் மனைவி சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளுக்கு டேட்டிங் அட்வைஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் மகேஷ்பாபுவின் வீட்டில் நிகழ்ந்த மரணம்.. திரையுலகினர் அஞ்சலி!

பிரபல நடிகர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்த மரணம் காரணமாக திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்துடன் மோதும் நடிகரின் படம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம் மீண்டும் அடுத்த ஆண்டு விஜய் படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.