'ரெளடி பேபி' பாடல் சாதனைக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: அதிர்ச்சியில் தனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,May 17 2022]

தனுஷ் நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரெளடி பேபி’ என்ற பாடல் யூ டியூபில் மிகப்பெரிய சாதனை செய்த நிலையில் அந்த சாதனைக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தனுஷ் தரப்பு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது .

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் ’3’ ‘எதிர்நீச்சல்’ ’காக்கா முட்டை’ மாரி’ ’காலா’ உள்ளிட்ட படங்கள் தயாராகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் ’மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ’ரெளடி பேபி’ என்ற பாடல் இடம் பெற்று இருந்தது என்பதும் இந்த பாடல் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வொண்டர்பார் நிறுவனத்தின் யூடியூப் சேனலை தற்போது மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் தனுஷ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த யூடியூப் சேனலை மீட்கும் நடவடிக்கையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த சேனல் மீட்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 

More News

'பெரியப்பா அனுபவத்தை கொடுத்தது': ஷங்கர் பாராட்டிய சூப்பர்ஹிட் படம்

பெரியப்பா அனுபவத்தை கொடுத்தது என சூப்பர் ஹிட் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார்.

பாடகி அவதாரம் எடுத்த பிரபல நடிகை… ரசிகர்களை மிரள வைக்கும் வைரல் வீடியோ!

மலையாள மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மஞ்சுவாரியர் தமிழில் முதல் முறையாக ஒரு படத்திற்கு

40 வயதிலும் வேற லெவல் கிளாமர்: மீரா ஜாஸ்மின் லேட்டஸ் போட்டோஷூட்

கடந்த 2000ம் ஆண்டுகளில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது 40 வயதில் தனது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாறையில் வழுக்கி விழுந்த டிடியின் சகோதரி: போட்டோஷூட் பரிதாபங்கள்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி போட்டோ சூட் எடுக்கும் போது கடற்கரையில் உள்ள பாறையில் வழுக்கி விழுந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இசைப்புயலின் இயக்குநர் அவதாரம்… முதல் படமே கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடல்!

ஆஸ்கர் விருது நாயகன் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் “லி மஸ்க்“ எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்தத்