தனுஷ்-சிம்பு பட தயாரிப்பாளர் மாரடைப்பல் மரணம்!

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் நடித்த ’கிங்’, தனுஷ் நடித்த ’திருடா திருடி’, ’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, சிம்பு நடித்த ’மன்மதன்’, விவேக் நடித்த ’சொல்லி அடிப்பேன்’, போன்ற படங்களை தயாரித்தவர் எஸ்கே கிருஷ்ணகாந்த் நேற்று இரவு தனது வீட்டில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் .அவருக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இரவு 10.45 மணிக்கு மாரடைப்பால் காலமான தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் இறுதிச்சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.