தனுஷிடம் 4 மணி நேரம் வேலை வாங்கிய இளையராஜா!

தனுஷிடம் இசைஞானி இளையராஜா 4 மணி நேரம் வேலை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசைஞானி இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’விடுதலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடலை தனுஷை அவர் பாட வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த பாடலை தனுஷை பாடவைக்க இளையராஜா நான்கு மணி நேரம் சொல்லி கொடுத்ததாகவும் அதன் பிறகு இந்த பாடல் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித் பட நாயகியுடன் ரக்சன்: 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா?

 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரக்சன், அஜித் பட நடிகையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில்

இனிமேல் மேனேஜர் எல்லாம் கிடையாது: நேரடியாக களத்தில் இறங்கிய யோகிபாபு!

இனிமேல் தனக்கு மேனேஜர் கிடையாது என்றும் தன்னுடைய படங்கள் குறித்த பேச்சு வார்த்தைக்கு தன்னிடம் நேரடியாக அணுகலாம் என்றும் நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'செம்பருத்தி' வனஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோ போல் இருக்காரே?

ஜீ டிவியில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவும் ஒளிபரப்பி வரும் 'செம்பருத்தி' சீரியல் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றது என்பதும் இந்த சீரியலில் உள்ள முக்கிய கேரக்டர்களில் நடித்த கார்த்தி

எனக்கே இந்த விஷயம் தெரியாதே: 'ருத்ரன்' ரிலீஸ் தகவல் குறித்து தயாரிப்பாளர் டுவிட்!

நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்' படத்தின் ரிலீஸ் தகவல் இணையதளங்களில் கசிந்து வரும் நிலையில் 'இந்த விஷயம் எனக்கே தெரியாதே' என இந்த படத்தின் தயாரிப்பாளர்

மனைவிக்கு ஒமிக்ரான், தனக்கு கொரோனா: பிரபல தமிழ் இயக்குனர் தகவல்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருடைய மனைவிக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.