தனுஷின் 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதோ:

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று தனுஷ் அறிவிக்கவுள்ளார் என்று வெளிவந்த தகவலை இன்று காலை பார்த்தோம்.

அதன்படி சற்று முன்னர் தனுஷ் 'விஐபி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவின்படி 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது. ஜூலை 28 என்பது தனுஷின் பிறந்த நாள் என்பதால் அவரது பிறந்த நாள் விருந்தாக இந்த படம் அதே தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் வெளிவந்த சில நிமிடங்களில் தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் #VIP2 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தமிழக அளவிற்கு டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

அருள்நிதி-ராதாமோகனின் 'பிருந்தாவனம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கி முடித்துள்ள அடுத்த படம் 'பிருந்தாவனம்'. கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அருள்நிதி நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழும் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

எஸ்பிபிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை! அமெரிக்காவில் பிரபல பாடகிக்கு துயரம்

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அவருடைய பாஸ்போர்ட், இசைக்குறிப்புகள் ஆகியவை ஒருசில முக்கிய பொருட்கள்ல் திருடப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அதே நிலைமை அதே அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகிக்கும் தற்போது நேர்ந்துள்ளது

ஜெயம் ரவியின் 'வனமகன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

'தனி ஒருவன்', 'போகன்' போன்ற படங்களை அடுத்து ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த படம் 'வனமகன்'.

பிரதமர் மோடியிடம் 'டாய்லெட்' குறித்து பேசிய '2.0' நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வருபவரும், சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகருமான அக்சயகுமார் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு?

பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்தன.