பார்த்தேன்‌, ரசித்தேன்‌, மகிழ்ந்தேன்: தனுஷின் நெகிழ்ச்சியான அறிக்கை

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

தனுஷின் பிறந்த நாள் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது. அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டர்களை வெளியிட்டது, தனுஷ் நடித்த படங்களின் பாடல் மற்றும் பர்ஸ்ட்லுக் வெளியானது என அன்றைய தினம் முழுவதும் தனுஷின் ஹேஷ்டேக்குகளே டிரெண்டில் இருந்தது. இந்த நிலையில் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ரசிகர்களால் தான் திக்குமுக்காடி போனதாக நன்றி அறிக்கையில் தனுஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

என்‌ ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை... உங்கள்‌ அன்பால்‌ திக்குமுக்காடிப்‌ போய்விட்டேன்‌.

அனைத்து காமன் டிபிக்கள்‌, மாஷ் அப்க்கள்‌, வீடியோக்கள்‌, மூன்று மாதங்களாக நீங்கள்‌ செய்து வந்த கவுண்ட் டவுன் டிசைன்கள்‌ அனைத்தையுமே என்னால்‌ முடிந்தவரை பார்த்தேன்‌, ரசித்தேன்‌, மகிழ்ந்தேன்‌.
மிக்க மிக்க நன்றி .

அதையும்‌ தாண்டி நீங்கள்‌ செய்த அத்தனை நற்பணிகளையும்‌ கண்டு நெகிழ்ந்த நான்‌, உங்களால்‌ கர்வம்‌ கொள்கிறேன்‌, பெருமைப்படுகின்றேன்‌!

மேலும்‌ எனக்கு தொலைப்பேசி வாயிலாகவும்‌, பத்திரிக்கை மூலமாகவும்‌, சமூக வலைத்தளங்கள்‌ வழியாகவும்‌ வாழ்த்துக்கள்‌ தெரிவித்த திரைத்துறையினர்‌, சமூக ஆர்வலர்கள்‌, அரசியல்‌ பெருமக்கள்‌, நண்பர்கள்‌ மற்றும்‌ பண்பலை, ஊடகம்‌, தொலைக்காட்சி அன்பர்களுக்கும்‌, என்‌ நலன்‌ விரும்பிகளுக்கும்‌ என்‌ நெஞ்சார்ந்த வணக்கத்தையும்‌,நன்றியையும்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌.

இவ்வாறு தனுஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிஸம், குரூப்பிஸமா? சாந்தனு டுவிட்டால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதில் இருந்தே நெப்போட்டிஸம் என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிப்பு: தியேட்டர்கள் திறக்க அனுமதியா?

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவும் அதனையடுத்து அன்லாக் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அன்லாக் 2.0 வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கவிழ்ந்த காரின் கண்ணாடியை உடைத்து கைக்குழந்தையை காப்பாற்றிய பொதுமக்கள்! வைரலாகும் வீடியோ

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித் தவித்த ஏழு மாத கைக்குழந்தை உட்பட தம்பதியை பொது மக்களே காப்பாற்றிய சம்பவம்

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கும்

விடுமுறை எடுத்து பொறியியல் படிக்கலாம், M.Phil படிப்பு இனி கிடையாது: புதிய கல்விக்கொள்கை அறிவிப்பு

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.