close
Choose your channels

வடிவேல் பாலாஜி மறைவு குறித்து தனுஷ் டுவீட்!

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி அவர்கள் திடீரென இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தி சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி பெரிய திரையில் உள்ள நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட வடிவேல் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றிய திரையுலக பிரபலங்கள் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருடன் பணிபுரிந்த மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வடிவேல் பாலாஜி மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். திறமை மிக்க நடிகர்களில் ஒருவரான வடிவேல் பாலாஜி அவர்களின் எதிர்பாராத மரணம் என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு நடிகர் விவேக், நடிகர் பிரசன்னா, நடிகர் சாந்தனு, நடிகர் சதீஷ், நடிகர் ரியோராஜ், நடிகர் ஆர்கே சுரேஷ், நடிகர் பாலசரவணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை காயத்ரி ரகுராம், நடிகை ரம்யா பாண்டியன், நடிகை ஆர்த்தி உள்ளிட்டோர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.