'D43' படத்தின் டைட்டில் குறித்து தனுஷின் டுவீட்!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ஒரு பாலிவுட் திரைப்படம் என மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது.

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்றும் முதல் நாள் படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்ததாகவும், ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் காட்சியை டான்ஸ் மாஸ்டர் ஜானி நடன இயக்குனராக பணியாற்றினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ’D43' படத்தின் டைட்டில் குறித்து தனது டுவிட்டரில் தனுஷ் கூறியபோது, ‘இந்த படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அனேகமாக வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இளம் நடிகரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரையுலகில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

எப்போது மீண்டும் தொடங்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக 7 மாதங்கள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில்

இந்த வாரம் ஒருவர் மட்டுமே எவிக்சன்: வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் வீட்டில் நடந்த கடைசி நாமினேசனில் வீட்டில் இருந்த அனைத்து ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒருவர் அல்லது இருவர் வெளியேற்றப்பட

டிக்கெட் டு பினாலே டாஸ்க்; 8 சுற்றுகளின் முடிவில் முதலிடம் இவருக்கா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் 'வாக்கியம் பொருத்துதல்' என்னும் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி: வாபஸ் பெற்றது தமிழக அரசு!

திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளை அடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக சமீபத்தில்