தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 06 2016]

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் விசாரணை ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், வெற்றிமாறனின் அடுத்த படமான 'வடசென்னை' படத்திற்கும் இசையமைப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.


தனுஷ், சமந்தா, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இந்த படம் 30ஆண்டுகால வடசென்னை பகுதியின் நிழலுலக சம்பவங்களை தொகுத்து தயாரிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் வெற்றிமாறன் மேலும் கூறியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஏற்கனவே தனுஷ் தயாரித்து நடிக்கும் 'கொடி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் நிலையில் அவர் தயாரித்து நடிக்கவுள்ள அடுத்த படமான 'வடசென்னை படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.