ரஜினி, விஜய், சூர்யா பட்டியலில் இணைந்த தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'தெறி', சூர்யா நடித்த 'எஸ்3' ஆகிய படங்களின் மலேசிய ரிலீஸ் உரிமைகளை பெற்ற நிறுவனம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.
மேற்கண்ட மூன்று படங்களும் மலேசியாவில் நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இதே நிறுவனம் தனுஷின் 'விஐபி 2' படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு பெற்றுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் 'விஐபி 2' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுடன் செய்துகொண்டதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக இணையதளங்களில் வெளியாகியுள்ளது. எனவே மேற்கண்ட 3 படங்கள் போல் இந்த படமும் மலேசியாவில் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் 'விஐபி 2' படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

More News

அஜித்துக்காக மாஸ் கதை ஒன்று வைத்துள்ளேன்: ஷங்கர் உதவியாளர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, தளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற வெற்றி படத்தை இயக்கியதோடு தற்போது 'மெர்சல்' படத்தையும் இயக்கி வருகிறார்...

கமல் படம் வெளியாகும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும். இந்து மக்கள் கட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை செய்ய வலியுறுத்தி வரும் இந்து மக்கள் கட்சி, கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினால் அவர் படம் வெளியாகும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும் என்று அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது...

விஜய்சேதுபதி-த்ரிஷாவுக்காக இயக்குனர் தேர்வு செய்த 30 இடங்கள்

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடிக்கும் '96' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்காக இயக்குனர் பிரேம்குமார் 30 லொகேஷன்களை தேர்வு செய்து வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

கமலுக்கு பின்னால் திரையுலகமே திரண்டு நிற்கும். விஷால்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு சர்ச்சையாகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்....

யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். மகளிர் ஆணையத்திற்கு கமல் பதில்

சமீபத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கு சம்பந்தமாக அவரது பெயரை கூறி கருத்து சொன்ன கமல்ஹாசனுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்...